book

நீலரதி

₹210+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாண்டில்யன்
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :சரித்திர நாவல்
பக்கங்கள் :476
பதிப்பு :7
Published on :2017
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

வாணகிரியின் சரிவின் பாதியில் இரு கால்களையும் சற்றே விரித்துத் திடமுடன் நின்றுகொண்ட இளமாரன், மனிதர்களை விழுங்கச் சித்தமாக நிற்கும் ராட்சஸனைப் போல் திடகாத்திரமான உயர்ந்த சரீரத்துடனும் கொடுமை தட்டிய கழுகுக் கண்களுடனும் காட்சி யளித்தாலும், அத்தனை கடுமைக்கும் பின்னால் ஏதோ ஒரு நகைச்சுவையும் அவன் மனத்தில் ஊசலாடுவதை அவன் இதழ்களில் மிக லேசாக அரும்பிய இளநகை நிரூபிக்கவே செய்தது. அன்று அவன் அவசரமாகப் பல் துலக்காமலும் காலைக்கடன்களை முடிக்காமலும் எழுந்து வந்து விட்டிருந்தாலும் முகத்தில் எந்தவித விகாரமோ, உறக்க உணர்ச்சியோ இல்லை. மேலே அங்கி ஏதும் அணியாமல் கிழே சல்லடத்தை மட்டும் அணிந்து இடுப்பிலிருந்து முழங்கால் வரை மறைத்த அந்த ஓர் உடையைத் தவிர வேறு ஆடையேதும் அவன் சரீரத்தை மறைக்காததால் காலைக் கதிரவன் ஒளிவீச்சில் மிகவும் சிவந்து அக்னி தேவதையே உருவெடுத்து வந்துவிட்டது போல் காட்சியளித்தான் இளமாரன். வீட்டைவிட்டு அவசரமாக உதயகுமாரனைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்ததால் ஆயுதமேதும் அவன் எடுத்து வரவில்லையென்றாலும் கைகள் எஃகு போல் காட்சியளித்த காரணத்தால் அவனுக்குத் தனியாக ஆயுதமேதும் தேவையில்லை என்பது பார்ப்பவர்களுக்கு நன்றாகப் புலனாகும். இந்தத் தோரணையில் வாணகிரிக் குன்றின் நடுமத்தியிலிருந்த சிறு வீட்டின் முன்பாக நின்றிருந்த இளமாரன் கீழே தரைமட்டத்திலிருந்து மலை ஏறித் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஆபத்தைச் சில விநாடிகளே நோக்கினான்.