பயணம் திறந்த இதயம் (மசூரி ஐ.ஏ.எஸ் பயிற்சி அனுபவம்)
₹155+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் இரா. ஆனந்தகுமார் இ.ஆ.ப.
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :174
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789388973137
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cartஹரிதுவார், தேராடூன் பயணம் மேற்கொள்வோருக்கு, மசூரியை கடக்கும் போது, ஒரு சிலிர்ப்பான அனுபவம் கிடைக்கும். அதோ தெரிகிறதே! அது தான் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பயிற்சி மையம். இங்கு தான் இந்தியா முழுமைக்குமான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது” என்று சுற்றுலா வழிகாட்டி குரல் கொடுப்பார். பச்சைப் பசேலென்ற, பசுமை போர்த்திய இமய மலை சாரலில், அந்த வெள்ளை வெளேர் கட்டிடம் ஒவ்வொருவருக்கும் ஒரு வித உணர்வுகளை உருவாக்கும். அந்த பயிற்சி மையத்திற்கு, நான்காம் கட்ட பயிற்சிக்கு செல்கிறார் தமிழ் நாட்டை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆர். ஆனந்தகுமார்.
தனது பயிற்சி மைய அனுபவங்களை ஒரு நூலாக வடிக்கிறார். எல்லாம் பயிற்சி மைய அனுபவங்கள் என்றும் கூறி விடவும் முடியாது. இந்த நூலை வாசித்து முடித்தவுடன், இது என்ன பயண இலக்கியமா? குடிமைத் தேர்வு எழுதுவோருக்கான எழுச்சி தரும் இலக்கியமா? நட்பின் மேன்மையை தாங்கி நிற்கும் நூலா? விளையாட்டு வழி வாழ்வியல் தத்துவங்களை பேசும் நூலா? என்ற மயக்கம் ஏற்படும். இது ஒருவகை பேசும் புத்தகம் ( Taking books) வடிவில் எழுதப்பட்ட நூல்.