book

பிள்ளையார் சுழி

₹66+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப்ரணா
பதிப்பகம் :கௌதம் பதிப்பகம்
Publisher :Gowtham Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789381134160
Out of Stock
Add to Alert List

பிள்ளையாரின் முகத் தோற்றம் “ஓ” என்றும் “ஓம்” என்றும் பிரணவத்தைச் சுருக்கமாக “உ” என முன்னெழுதி ஏனையவற்றைப் பின் எழுதுவது சுவடி எழுதுவோரின் மரபாக இருந்துள்ளது. ஒலி வடிவிலும், வரி வடிவிலும் ஐந்தன் கூட்டமாகிய பிரணவத்தின் அகரம் சிவம்; உகரம் சக்தி; மகரம் மலம்; நாதம் மாயை; விந்து உயிர் ஆகும். இவற்றுள் அகர உகர வடிவாக உள்ள பிள்ளையார் சுழி சிவசக்தியின் சேர்க்கை. பிள்ளையார் தடைகளை வில‌க்குப‌வ‌ர் என்பதால், நாம் தொடங்கும் எந்த செயலும் தடையில்லாமல் நடக்க பிள்ளையாரை வணங்கி அல்லது பிள்ளையார் சுழி – போட்டு தொடங்க வேண்டும் என்பது வழக்கம். ஆனால் பிள்ளையார் தனது தாய் தந்தையாகிய உமையாள், உமையவனை முதன்மையாக வைத்து குறிப்பதற்காக சுருக்கமாக “உ” என்ற சுழியை உருவாக்கினார் என்பது ஒரு கருத்து.