book

தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் வழக்குகள் மதிப்பீடு சட்டம் 1955

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :Giri Law House
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :284
பதிப்பு :1
Published on :2017
ISBN :9789391990183
Out of Stock
Add to Alert List

தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் வழக்குகள் மதிப்பீடு சட்டம் என்னும் இச்சட்டம், உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளில் மிகவும் முக்கியமான சட்டமாகும். தமிழ்நாட்டிலுள்ள உயர் நீதிமன்றம், மாட்ட நீதிமன்றம், அமர்வு நீதமன்றம், விரைவு நீதிமன்றம் (Fast Track Court), தீர்ப்பாயங்கள் (Tribunals), சார்பு நீதிமன்றம் (Sub-Court), தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (Chief Judicial Magistrate Court), கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (Additional Chief Judicial Magistrate), நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (Judicial Magistrate Court), கூடுதல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (Additional Judicial Magistrate Court), மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் (District Munsif Court), கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் (Additional District Mnusif Court), மகளிர் நீதிமன்றம், சிறுவர் நீதிமன்றம், வருவாய் நீதிமன்றம் (Revenue Court), குத்தகை உரிமை பதிவு நீதிமன்றம் (R.T.R. Court), வருவாய் நீதிமன்றம் (Revenue Court), மாவட்ட வருவாய் அலுவலர் நீதிமன்றம் (D.R.O. Court), மாவட்ட ஆட்சியர் நீதிமன்றம் (District Collector Court) ஆகியவற்றில் நடைபெறும் வழக்குகளிலும் இன்னபிற அலுவலகங்களில் நடைபெறும் மனு நடைமுறைகளிலும் செலுத்த வேண்டிய நீதிமன்றக் கட்டணம் எவ்வளவு என்பது இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மனுவில் அல்லது வழக்கில் இந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்தை முத்திரைவில்லையாக (Stamp) அல்லது முத்திரைத்தாளாகத் தாக்கல் செய்தல் வேண்டும். நீதிமன்றக் கட்டணத்தைப் பணமாகச் செலுத்த முடியாது.