book

குற்றவியல் சட்டங்கள் (Criminal Major Acts) முப்பெரும் சட்டங்கள் குற்றச்சாட்டு வனைவுகளுடன்

₹800
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :Giri Law House
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :510
பதிப்பு :6
Published on :2018
ISBN :9789391990008
Out of Stock
Add to Alert List

குற்றவியல் சட்டங்கள் (Criminal Major Acts) என்னும் இந்நூல் இந்தியத் தண்டனைச் சட்டம், (Indian Penal Code) இந்தியச் சாட்சியச் சட்டம் (Indian Evidence Act), குற்ற விசாரணைமுறைச் சட்டம் (Criminal Procedure Code) என்னும் மூன்று முக்கிய சட்டங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தியத் தண்டனைச் சட்டம் 1860 - ஆம் ஆண்டில் இயற்றப்பட்டதாகும் இந்தச் சட்டத்தில் 1860 ஆம் ஆண்டிலிருந்து அண்மையில் இணைக்கப்பட்ட (2018 ஆம் ஆண்டின் குற்றவியல் சட்ட திருத்தங்கள்) பிரிவுகள் வரை அனைத்துப் பிரிவுகளும் அடங்கியிருப்பதுடன், நூற்றுக்கணக்கான வழக்குத்தீர்வுகளும் இந்நூலில் அடங்கியுள்ளன. இந்தியத் தண்டனைச் சட்டம் என்பது என்னென்ன செய்கைகள் குற்றமுடையவை என்பதனையும் அவை ஒவ்வொன்றுக்கும் என்ன தண்டனை என்பதையும் பற்றி விளக்கியுள்ளார் இந்நூலின் ஆசிரியர். இந்தியத் தண்டனைச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களைத்தவிர வேறு பல குற்றங்களும் உள்ளன. அவைகள் பல்வேறு வகையில் தனித்தனிச் சட்டங்களாக (Special Acts) இயற்றப்பட்டுள்ளன.