book

நன்றாகப் படிக்க

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இஞ்ஞாசிமுத்து
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :142
பதிப்பு :1
Published on :2018
ISBN :9788184028256
Add to Cart

படிக்கப் போகும் பாடங்களை முழுவதுமாக வாசித்து விட வேண்டும். வாசித்த பாடத்திலுள்ள தலைப்புகளையும் துணைத் தலைப்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதைச் செய்யும் போது அந்த பாடத்தைப் பற்றிய ஒரு பரந்துபட்ட அல்லது ஒட்டுமொத்த புரிதல் எற்பட்டு அது மனதினுள் நன்றாகப் புரியும். பாடம் பற்றிய பாடச்சுருக்கத்தை சரிவர வாசிக்க வேண்டும்.
கேள்வி கேளுங்கள்
நன்றாகப் படிக்க வேண்டுமானால் பாடச்சுருக்கத்தை சரிவர வாசித்தபின் ஒவ்வொரு தலைப்பின் மைய்யக் கருவையும் ஒரு கேள்வியாக மாற்றி அதற்கு விடை தேடுங்கள். இப்படி கேள்வி கேட்பதால் அப்பாடம் குறித்த ஆர்வமும் சந்தேகங்களும் அதிகரிக்கும், நன்றாகப் படிக்க ஆர்வமும் ஏற்படும். இதன் பயன்கள் என்ன? எதனால் இது நடைபெறுகிறது ? என்று தெளிவாக புரியாத கேள்விகளுக்கு விடை தேடுங்கள்!