book

ஆடு புலி ஆட்டம்

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2017
Add to Cart

“நம்மை ஒருவன் இகழ்ந்து பேசினாலும் பதிலுக்கு நாம் அவனைத் தூற்றிப் பேசக்கூடாது. இகழப்பட்டவர் பொறுமை யாக இருந்தால் அவர் அடங்கிக் கொண்ட வேதனை நெருப்பைப் போல் தீவிரம் பெற்று அவரை இகழ்ந்தவனைப் பற்றிக்கொண்டு விடும். அது மட்டுமல்ல, இகழ்ந்தவன் ஏதாவது புண்ணியம் செய்திருந்தால் அது இகழப்பட்ட வனைப் போய்ச் சேர்ந்து விடும்.”
-விதுர நீதி
அதிகாலை நேரம்! தெருக்களில் பேப்பர் போடும் மனிதர்களின் சைக்கிள் மணி ஓசையோடு, பால்காரரின் வருகையை பிரத்யேகமாக தெரிவிக்கும் அவனது கோயில் மணி போன்ற பித்தளை மணியின் ஓசையும் கலந்து ஒலிக்கும் அதிகாலை வேளையில் அந்த பங்களாவின் எழிலான மெயின் கேட் திறந்து கொள்ள உள்ளிருந்து ஒரு நவீனமான படகு கார் தெருவில் இறங்கியது! காருக்குள் டிரைவிங் சீட்டில் இருந்த காயத்ரியை பார்த்து கேட் வாட்சமேன் வடிவேலு சற்று அதிர்ந்தான். அவன் அதிர்விலிருந்து மீள்வதற்குள் அந்தக் கார் தெருவில் இறங்கி கண்களை விட்டும் மறைந்துவிட்டது.