book

சிந்தனைச் சோலையில் மலர்ந்த மலர்கள்

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏ.எம். ராஜகோபாலன்
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :தத்துவம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2016
Out of Stock
Add to Alert List

இது சோலையில் நடக்கிறது என்கிறார். சோலை என்றால் மேலே வண்டின் பண்ணிசைந்த ரீங்காரத்திற்குப் பரிசாக தனது தேனைக் கொடுத்த மலர்கள் நிலத்தில் உள்ள கோட்டுப் பூ, கொடிப் பூ, நிலப் பூ என்ற வகைகளைச் சேர்ந்தவை; அவை பாட்டு கேட்டுப் பரிசளிக்கின்றனவாம்! பாட்டு கேட்டால் பரிசளிக்க வேண்டும். ஓரறிவுயிரான மலரே பரிசளிக்கின்றதே! என்ன ரசனை அதற்கு! ஆனால் நம் ஆட்களோ பாடறயா ஓடறேன் நான் என்கிறார்கள் சிலர்!  அடுத்து அது சோலை அல்லவா? அதனால் சோலையில் பறவைகள் இருக்குமே! அப்பறவைகளில் இரண்டு, கற்றுக் கொடுத்ததைத் திருப்பிச் சொல்லும் ஆற்றல் உடையவை. ஒன்று கிளி; மற்றது நாகணவாய்ப் பறவை என்று பழந்தமிழ் இலக்கியங்களில் வரும் பூவை (அ) மைனா. சில மேலை நாடுகளில் இதனைச் சிண்ட்ரெல்லா என்பர்.

  இந்தச் சோலையில் இறைவனுக்குத் தொடுக்க மலர் பறிக்க அடியார்கள் வருகிறார்கள். அந்த அடியார்களின் பத்தி வயத்தால் அவர்கள் திருமுறைப் பதிகங்களைப் பாடிக் கொண்டே வருகிறார்கள். அதைக் கேட்டுக் கேட்டுக் கேட்டதைப் பாடும் மைனாக்கள் தாமாகப் பாடிக் கொண்டிருக்கின்றனவாம். மைனாவிற்கு இன்னொரு பெயர் சாரிகை. ஆக இந்தச் சாரிகைகள் பண்ணோடு பதிகங்களைக் கேட்டுப் பாடிக் கொண்டு இருக்கின்றனவாம்! அது கேட்பதற்குத் தேனாக இருக்கிறதாம்!