book

கண்ணதாசனின் விஞ்சிய புகழுக்குக் காரணம் தத்துவப் பாடல்களே! காதல் பாடல்களே!

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கண்ணதாசன் ஆடியோஸ்
பதிப்பகம் :கண்ணதாசன் ஒலிபுத்தகம்
Publisher :Kannadasan DVD
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2015
Out of Stock
Add to Alert List

கவிஞர் கண்ணதாசனின் விஞ்சிய புகழுக்குக் காரணம் தத்துவப் பாடல்களே! காதல் பாடல்களே! டாக்டர். திருமதி சரஸ்வதி ராமநாதன் சிறப்பு பட்டிமன்றம் ஆடியோ வடிவில். 

பட்டிமன்ற நடுவர் டாக்டர். திருமதி சரஸ்வதி ராமநாதன். 

கவிஞர் கண்ணதாசனின் விஞ்சிய புகழுக்குக் காரணம் தத்துவப் பாடல்களே! - 
தலைவர் இலக்கியச் சுடர் த.இராமலிங்கம்; 
சுபாஷ் சந்திரபோஸ்;  
சரஸ்வதி நாகப்பன்.

கவிஞர் கண்ணதாசனின் விஞ்சிய புகழுக்குக் காரணம் காதல் பாடல்களே! - 
தலைவர் முனைவர் பேராசிரியர் கி. ராஜகோபாலன்; 
விசாலாட்சி சுப்பிரமணியம்; 
அரு. நாகப்பன்.

அன்பார்ந்த நேயர்களே!
காலத்தால் அழியாத கவியரசு கண்ணதாசனின் புத்தகங்களை, ஒலிப்புத்தகங்களாய் Audio Books வடிவத்தில் கண்ணதாசன் ஆடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. மேலும் பாடல் கேட்பது போன்ற பரவசத்துடன் மிக இயல்பான குரலில், புத்தக வாசிப்பின் புது அனுபவத்தை உங்களுக்கு தரும் இந்த முயற்சிக்கு உங்கள் ஆதரவு தேவை. இந்த ஒலிப்புத்தகங்களை பிரதி எடுத்து விநியோகிப்பதையும் இன்டர்நெட்டில் ஏற்றம் செய்வதையும் தவிர்க்க உதவிட வேண்டும். உங்களின் இந்த உதவி மேலும் பல சிறந்த நூல்களை இதே போன்று ஒலி வடிவில் கொண்டுவர உங்களுக்குத் துணை புரியும்.
                                                              - காந்தி கண்ணதாசன். 

கவிஞர் கண்ணதாசனைப் பற்றி: 
கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். இவர் சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.