book

குறள்நெறி - அறம்

₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் கே.ஏ. இராஜூ
பதிப்பகம் :விதை வெளியீடு
Publisher :Vithai Veliyedu
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :699
பதிப்பு :1
Published on :2012
குறிச்சொற்கள் :niyandar selvan, Udambu koriya
Out of Stock
Add to Alert List

பாயிரத்தில்(கடவுள் வாழ்த்தில்) கடவுள்,,வான் மழை, நீத்தார்க்குச்  சிறப்புத்தந்தவர்,
"அறன் வலியுறுத்தலையும்" சேர்த்து  வணங்கத்தக்கதாக வைத்திருப்பது சிந்தனைக்குரியது!.
திருக்குறள் எழுதப்பட்டதின் நோக்கமே அறத்தை வலியுறுத்துவதற்காகவே!
அறத்துப்பாலுக்கும்  பொருட்பாலுக்கும்  அறமே அடிப்படை!
பொருளை அறநெறியில் ஈட்டி,இல்வாழ்க்கையை அறவழியில் மேற்கொண்டு
இன்பம் பெறவேண்டும் என்பதுதான் திருக்குறளின் சாரம் !
எது அறம்?
சட்டம் என்பது சமுதாயக் குற்றங்களை தடுப்பதற்காக  இயற்றப்பட்டு காவல்துறை ,நீதிமன்றங்கள் முலம் அமுலாக்கப்படுகிறது!
இச்சட்டங்கள் நாட்டுக்கு நாடு,வேறுபடுவது ! காலத்திற்கு காலம் மாறுபடுவது !
ஆனால்அறம் ஒரு வாழ்வியல் நெறி ! மனிதகுலம் இப்படித்தான் வாழவேண்டும் எனத் தொன்றுதொட்டு உணர்த்தப்பட்ட
மனித தர்மம் ! இதயத்தோடு ஒன்றிவிட்ட மனிதப்பண்பு ! அறத்தை வலியுறுத்த எந்த நீதிமன்றமும் இல்லை!
நமது மனச்சான்றே நீதிபதி !சட்டத்தை ஏமாற்றிவிடலாம். ஆனால் மனத்தை ஏமாற்றமுடியாது ! அறத்திற்கு புறம்பாக
நடந்தால் தன் நெஞ்சே தன்னைச்சுடும் !