வினை தீர்க்கும் விநாயகர்
₹12+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந. பரமேஷ்வரன்
பதிப்பகம் :ஏகம் பதிப்பகம்
Publisher :Yegam Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :7
Published on :2013
Add to Cart- தமிழ்நாட்டில் பல விநாயகர் தலங்கள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன.
- காணிப்பாக்கம் விநாயகர் மிக, மிக சக்தி வாய்ந்தவர்.
இந்து மதத்தில் எத்தனையோ கடவுள்கள் உள்ளனர். அந்த கடவுளர்களுக்கு ஏற்ப ஆலயங்களும், வழிபாடு முறைகளும் இருக்கின்றன.
ஆனால் எல்லா ஆலயங்களிலும் இடம் பெற்றிருப்பவர் விநாயகர் மட்டுமே. அது எந்த கோவிலாக இருந்தாலும் சரி, எந்த இடத்தில் இருந்தாலும் சரி, விநாயகர் நிச்சயம் நுழைவாயிலேயே அமர்ந்திருப்பார்.
அவரிடம் ஆஜராகி வணக்கம் போட்ட பிறகே ஆலயத்தில் மற்ற இடங்களுக்கு செல்ல முடியும். எனவேதான் விநாயகரை 'முழு முதல் கடவுள்' என்றும் `எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவர்' என்றும் போற்றுகிறோம்.
விநாயகரை எல்லாருக்குமே பிடிக்கும். அதற்கு முக்கிய காரணம், நாம் தொடங்கும் எந்த ஒரு செயலையும், இடையூறுகள், எதிர்ப்புகளைப் போக்கி வெற்றி பெற செய்வார்.