book

மாடு வளர்ப்பு

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் ச.சண்முகசுந்தரம்
பதிப்பகம் :கண்ணப்பன் பதிப்பகம்
Publisher :Kannappan Pathippagam
புத்தக வகை :தொழில்
பக்கங்கள் :240
பதிப்பு :6
Out of Stock
Add to Alert List

வேளாண் துணைத்தொழில்களில் முக்கியமானது பால் பண்ணை. மாடு வளர்ப்பு நல்ல லாபம் தரக்கூடிய தொழில்தான் என்றாலும், வேலையாட்கள் கிடைக்காதது, மாடுகளுக்கான தீவனம் வளர்க்க ஏக்கர் கணக்கில் நிலம், அதற்குத் தேவையான தண்ணீர் போன்ற காரணங்களால் பலர் பால் பண்ணை தொழிலில் நுழையவே தயக்கம் காட்டி வருகிறார்கள். ஆனால், இனி மாடுகளுக்கான தீவனம் வளர்க்க ஏக்கர் கணக்கில் இடம் தேவையில்லை. 60 சதுர அடி இடம் இருந்தால் போதும்..பத்து மாடுகளுக்கான தீவனம் உற்பத்தி செய்து விடலாம்.’’ என்கிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த சரவணக்குமார். மென்பொருள் துறையில், பல நிறுவனங்களில், பல நாடுகளில் பணிபுரிந்தவர். ‘‘ நான் ஐ.டி வேலையையும் என்ஜாய் பண்ணித்தான் செஞ்சிகிட்டு இருந்தேன். ஆனாலும், அங்க நமக்கு மேல சில பேரு இருப்பாங்க.. தினமும் சாயங்காலம் 5 மணிக்கு கான்கால்ல (கான்பரன்ஸ் கால்) வந்து, வறுத்தெடுப்பாங்க. அது பெரிய டென்சனா இருக்கும். இந்த நிலையில, என்னோட அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாம போனதும், அவரோட தொழிலை கவனிச்சுக்கறதுக்காக வேலையை விட்டுட்டு வந்தேன். எனக்கு சின்ன வயசுல இருந்தே விவசாயத்து மேல ஒரு ஈடுபாடு இருந்துச்சு. இங்க வந்ததும் அது அதிகமாச்சு..எங்களுக்கு இருந்த தென்னந்தோப்பை பாத்துகிட்டு இருந்தேன். ஆனா, அதுல பெருசா வருமானம் வரலை. அப்பத்தான் பால் பண்ணை ஆரம்பிக்கலாம்னு ரெண்டு மாடுகளோட ஆரம்பிச்சேன். இப்ப 30 மாடுக இருக்கு. எல்லாமே கலப்பின மாடுங்கதான்.