book

வேரில்லாத மரங்கள்

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவசங்கரி
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :280
பதிப்பு :6
Add to Cart

அடுப்பிலிருந்த சாம்பாரை தாளித்து, இறக்கி வைத்தாள் வத்சலா.
ஹாலில் மகள் அபியும், கணவன் மாதவனும் சிரிக்கும் சப்தம், கேட்டது. கையை டவலால் துடைத்தபடி வந்தாள்.
''அப்பா, இந்த ப்ராஜெக்ட இன்னும் ஒரு வாரத்தில முடிச்சாகணும்.''
அப்பாவும், மகளும், லேப் - டாப்பில் தலையைக் கவிழ்த்திருந்தனர்.
''என்ன செய்றீங்க,'' என்று கேட்டாள் வத்சலா.
''டவுன்லோடு செய்துகிட்டு இருக்கோம்,'' கண்களை எடுக்காமல், பதில் சொன்னான் மாதவன்.
''அப்படின்னா என்னங்க?''
''ஐயோ அம்மா... நீ வேற, 'தொண தொண'ன்னு. உனக்கு இதைப்பத்தி எல்லாம் ஒண்ணும் தெரியாது. கொஞ்ச நேரம் பேசாம இருக்கியா?''
மகளின் பதிலில், முகம் வாடிப் போக, ''சரி, சமையல் ரெடியாயிடுச்சு, பசிச்சா சொல்லுங்க. எடுத்து வக்கிறேன்,'' என்றாள் வத்சலா.
''என்ன வழக்கம் போல சாம்பார், பொரியல் தானே செய்திருக்கப் போற... புதுசா எதுவும் ட்ரை செய்ய மாட்டே.''
கணவன் கூறியதைக் கேட்டு, மேலும் முகம் சுருங்கிப் போனாள். மெல்ல மகனின், அறை நோக்கி நடந்தாள்.