புதிய கோணம்
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ.ச.ஞானசம்பந்தன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :254
பதிப்பு :2
Add to Cartபுதிய கோணம் என்னும் இந்த நூல் பல்வேறு காலங்களில் நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பெற்ற கொப்பரைத் தேங்காய், புலியார் நட்பு, பழைய சிறுகதை, கபிலரும் பாரியும், 'க'னாவும் 'கா'வன்னாவும், கவிஞன் கண்ட விஞ்ஞானம் என்பவை சங்க இலக்கியங்களை அடித்தளமாகக் கொண்டு எழுதப் பெற்றவை. புதிய கோணம் என்பது சிலப்பதிகாரம் பற்றிய கட்டுரையாகும். இவை அனைத்தும் பல்லாண்டுகளுக்கு முன்னர் எழுதப் பெற்றவை. என்னுடைய நூலைப் படித்து பழக்கப்பட்டவர்களுக்கு இக்கட்டுரைகள் புதுமையாக இருக்கும். அ.ச.தான் இவற்றை எழுதினானா? என்ற ஐயம் கூட சிலர் மனத்தில் தோன்றலாம். உண்மையில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் எனது எழுத்து நடை எப்படியிருந்தது என்பதற்கு இவை அடையாளம் ஆகும்.
கவிதைப் பண்பு என்ற கட்டுரை திருக்குறளை ஓர் இலக்கியமாகக் கருதி பார்க்கின்ற பார்வையாகும். வள்ளுவன் கண்ட இன்பம் என்னும் கட்டுரையும் குறள் பற்றியதேயாகும். எனினும் இவற்றுள் முதற்கட்டுரை பல்லாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது. இரண்டாம் கட்டுரை அண்மையில் எழுதப்பட்டதாகும்.