எழுதுபவர்களில் இரண்டு விதம் உண்டு. மூளைக்கு எழுதுபவர்கள், இத 'யத்துக்கு
எழுதுபவர்கள். வள்ளியப்பன் இரண்டுக்குமாக எழுதுபவர்.ஒரேயடியாக சுயமுன்னேற்ற
இறக்குமதிச் சரக்குகள் தமிழ்ப் புத்தக உலகை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த
சமயத்தில் ஒரிஜினல் தமிழ்ச் சிந்தனையுடன், தமிழ் வாசகர் வட்டத்தின் தேவைகளை
மனதில் வைத்து எழுதத் தொடங்கினார் வள்ளியப்பன், எளிய உதாரணங்கள்,
அழுத்தமான கருத்துகள், வாசிப்பவரின் தோளில் கைபோட்டுப் பேசும் இவரது
புத்தகங்களுக்குத் தமிழகத்தில் லட்சக்கணக்கில் ரசிகர்கள் உண்டு. எழுதிக்
கொண்டு மட்டும் இருந்தவரை இழுத்துக்கொண்டுபோய் மேடைகளிலும் ஏற்றிய
ரசிகர்கள் அவர்கள்.இன்றைக்குத் தமிழகம் முழுவதும் வள்ளியப்பனின் வாழ்வியல்,
நிர்வாகவியல் வகுப்புகள் பிரபலம். பங்குச் சந்தை வர்த்தகம் குறித்த அவரது
'அள்ள அள்ளப் பணம்' (மூன்று பாகங்கள்) காற்றுள்ள இடம் அனைத்தும்
பரவியிருக்கிறது. கடினமான விஷயங்களை மிக எளிமையாக எடுத்துச் சொல்லும் அவரது
பாணி அபூர்வமானது.
புகழ்பெற்ற வர்த்தக நிறுவனம் ஒன்றின் மனித வளத்துறை துணைத்தலைவராகப்
பணியாற்றும் சோம.வள்ளியப்பன், தேவ கோட்டைக்காரர். வசிப்பது சென்னையில்,
வாழ்வது எழுத்தில்....