வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு வழிகாட்டும் நூல்”
திரு சிவகுமார் தலைவர், ஆரெம்கேவி நிறுவனங்கள்
சோர்வுற்றிருப்பவர்கள் விட்டமின் ஊசி போட்டுக் கொள்வார்கள். இதன் பலன்
சில நாட்கள் மட்டுமே. திரு, சந்திரசேகரின் பொருள் பொதிந்த வார்த்தைகளை
புரிந்து கொள்பவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் வெற்றியைத் தங்களோடு வைத்துக்
கொள்வார்கள்.
திரு தெ. ஈஸ்வரன் தலைவர், ஈஸ்வரன் பிரதர்ஸ், கொழும்பு
எளிமையான கதைகளைக் கொண்ட இந்தநூல் மனதைக் கரைத்து, ஆழ்மனதிற்குள்
புகுந்துவிடும் தன்மை படைத்தது. திரு. சந்திர சேகரன் அவர்களுடைய
தொலைக்காட்சி நிகழ்வுகள், கருத்தரங் கங்கள் பயிற்சி வகுப்புக்கள், நூல்கள்
யாவையுமே மக்களின் மனத்தில் உற்சாகமூட்டி, சிறந்த மாற்றங்களை உருவாக்குபவை.
தமிழில் இத்தகைய எழுத்தாளர்களைக் காண்பது அரிது. எல்லா வயதினரும்
படிக்கவேண்டிய நூல் 'இன்னும் கொஞ்சம் சாதிக்கலாமே!'
திரு சி.சிவகுமார் தலைவர், பிரபா தொகுதி நிறுவனங்கள், சென்னை