எல்.கே.ஜி.முதல் ஐ.ஏ.எஸ். வரை; எத்தகைய நினைவாற்றல் உத்திகளைப் பயன்படுத்தினால் எளிதில் அதிகமான தகவல்களை மனத்தில் நிறுத்திக் கொள்ளலாம் என்பதை உணர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். புரிதல் நினைவாற்றல் திறனை மேம்படுத்தி, பயன்படும் அறிவாக மாறும்போது முனைந்து முயற்சி செய்யவும் அனைவருக்கும் வெற்றி உறுதி. அறிந்த தகவலை வகைப்படுத்தி நினைவில் நிறுத்த வேண்டியதைத் தொகுத்து நினைவிற்கு உகந்த விதத்தில் மனத்தில் பதிவு செய்துகொண்டால் உரிய நேரத்தில் மறக்காமல் விடையளிக்க இயலும். தனது திறனறிந்து படிப்பைத் தேர்வு செய்தால் அந்தப்படிப்பை ஆர்வமாகப் பயின்று நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். வெற்றி என்பது பன்முகத் திறன்களை உள்ளடக்கியது. அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் எடுத்துக்கொண்டாலும் தங்களது நுண்ணறிவைப் பயன்படுத்தி ஒவ்வொருஒருக்கான செயல்திட்டங்களை வடிவமைத்துக்கொண்டு நிகழ்காலத்தை அர்த்ததுடையதாக மாற்றிக்கொள்ள வேண்டும். சிறிய செயல்களையும் அன்புடன் செய்யவேண்டும். பல சிறிய செயல்களின் தொகுப்பே அனைவரும் போற்றும் தலைமைப் பண்பாக அமையும். பணியில் இருந்துகொண்டே உயர் கல்வி மற்றும் பணி சார்ந்த திறமையை மேம்படுத்திக்கொள்ள முயலவேண்டும். எந்தப்படிப்பு படித்தாலும் அதைக் கவனத்துடன் ஆழ்ந்து படிக்கவேண்டும். எந்த வேலை பார்த்தாலும் அதில் ஆர்வத்துடன் ஈடுபட்டுத் திறமையை வெளிப்படுத்தவேண்டும். ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும் மறைந்திருக்கும் முழுத்திறனையும் வெளிக்கொண்டுவரும் விதத்தில் வழிகாட்டுதல்கள் அமையவேண்டும்.
- பதிப்பகத்தார்.