திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் பா. சுரேஷ்குமார் அவர்கள் இந்நூலை உருவாக்கித்
தந்துள்ளார். 1992 முதல் 1995 வரை புதுக்கோட்டையில் பணியாற்றும் போது தன்னார்வப்பயிலும் வட்டம் என்ற அமைப்பை அமைத்து வழிநடத்தினார். இந்த அமைப்பு இளைஞர்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டது. பின்னர் அவர் விருதுநகரில் 1995 -ல் பணியாற்றும் போது இத்திட்டம் அரசுத்திட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1999 முதல் அரசு நிதி உதவியுடன் 24 மாவட்டங்களில் செய்லபடுத்தப்பட்டது. பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் மற்றும் அனைத்து பஞ்சாயத்து யூனியன்களிலும் ஆரம்பிக்கப்பட்டு வேலைவாய்ப்புத்துறை மூலம் தன்னார்வப் பயிலும் வட்டம் செயல்பட்டுவருகிறது. தனியார் வேலைவாய்ப்பு, சுயதொழில் ஆலோசனை, உயர்கல்வி வழிகாட்டுதல், ஆளுமைத் திறன் வளர்ச்சி என்ற பன்முகத் திறன் மேம்பாட்டுச் செயல்பாடுகள் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் நடைபெறுகின்றன. அனுபவம் சார்ந்த புரிதல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்நூலாசிரியர் கட்டுரைகளை உருவாக்கியுள்ளார். முயற்சிகள் தவரலாம், ஆனால் முயற்சிக்கத் தவறக்கூடாது என்ற அடிப்படையில் தேர்வுகளை சந்திக்கத்தயாராகுங்கள்,வெற்றிபெறுங்கள்.