போட்டித் தேர்வுகளில் தன் முனைப்புடன் பங்கேற்கவும், வாழ்க்கைஇல் முன்னேறவும் இந்நூல் பெரிதும் வழிகாட்டுகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் ப.சுரேஷ்குமார் அவர்கள் இந்நூலை உருவாக்கித் தந்துள்ளார். 1992 முதல் 1995 வரை புதுக்கோட்டையில் பணியாற்றும்போது தன்னார்வப் பயிலும் வட்டம் என்ற அமைப்பை அமைத்து வழிநடத்தினார். இந்த அமைப்பு இளைஞர்களை மேம்படுத்துவம் பணியில் ஈடுபட்டது. பின்னர் அவர் விருதுநகரில் 1995-ல் பணியாற்றும்போது இத்திட்டம் அரசுத் திட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1999 முதல் அரசு நிதி உதவியுடன் 24 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. பின்னர் அனைத்துப் பஞ்சாயத்து யூனியன்களிலும் ஆரம்பிக்கப்பட்டு வேலைவாய்ப்புத்துறை மூலம் தன்னார்வப் பயிலும் வட்டம் செயல்பட்டுவருகின்றது. தனியார் வேலைவாய்ப்பு, சுயதொழில் ஆலோசனை, உயர்கல்வி வழிகாட்டுதல், ஆளுமைத் திறன் வளர்ச்சி என்ற பன்முகத் திறன் மேம்பாட்டுச் செயல்பாடுகள் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் நடைபெறுகின்றன.