எல்லாம் உலகமயம் ; உலகமயமாதல் என்பதைப் பொருளாதாரம் தொடர்பில் பயன்படுத்த தொடங்கியது 1981ஆம் ஆண்டிலேயேயாகும் . உலகம் தழுவிய சமூகவியல் ஆய்வுகளிலும் , இது ஒரு பரந்த அனைத்தும் தழுவிய தோற்றப்பாடாக உணரப்பட்டது. தலை சிறந்த பொருளாதார நிபுணர் திரு எம் சிசிவசுப்பிரமணியன் படைத்துள்ள இந்த தூல் உலகமயமாதலை பல கோணங்களில் இருந்த புள்ளி விவரங்களுடன் சேர்ந்து ஆதாரதுடன் படைத்திருக்கிறார்.உலகமயமாதல் என்பது இந்நூலில் பல கோணங்களில் இருந்து நோக்கப்படுகின்றது. உலகமயமாதல் பலமான மொழி , பண்பாட்டு, அடையாளங்களை முன்னிறுத்தி சிறுபான்மை இனமொழி பண்பாட்டு அழிவுக்கு அல்லது சிதைவுக்கு இட்டு செல்வதாக சிலர் வாதிக்கின்றனர். இக்கூற்றில் உண்மையுண்டு. எனினும் ஒரு சமூகத்தின் அடிப்படைக்கூறுகளை இழக்காமல் உலகமயமாதல் உந்தும் அல்லது தருவிக்கும் அம்சங்களையும் ஒரு சமூகம் ஏற்றுக்கொள்ள முடியும் அதாவது உலகமயமாதல் இருக்கும் ஒன்றின் அழிவில் ஏற்படாமல், இருக்கும் ஒன்றோடு அல்லது மேலதிகதான அம்சங்களை அறிமுகப்படுத்தும் ஒரு உந்தலாகவும் பார்க்கலாம். உலகமயமாதல் பல முரண்பாடான விளைவுகளை உந்தக் கூடியது. ஒரு புறத்தில் மரபு வழி சாதிய சமூக கட்டமைப்புகளால் பிணைக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட , சுரண்டப்பட்ட சமூகங்களை, குடும்பங்களை ,தனி மனிதர்களை விடுவிக்கக்கூடிய தொழில், தொடர்பு, போக்குவரத்து , கல்வி வாய்ப்புகளை உலகமயமாதல் முன்வைக்கிறது.
- பதிப்பகத்தார்.