தப்பாட்டம் ; கிராமத்துத் திண்ணைப்பள்ளிக்கூடத்தில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமிபோல முழிக்கிறேன். ஆனால்
ஒன்று சொல்ல முடியும். காலம்காலமாக ஒடுக்கப்பட்டுக்கிடக்கும் என்னுடைய மண்ணும் மக்களும் மேலும்
நெருக்குதலுக்கு உள்ளாகும்போது கத்த முடியாமல் முக்கி முனகுவதைக்கேட்டு என் மனசு பதறிப்போகிறது.
என்னுடைய இருப்போடு எல்லாவற்றையும் இலக்கிய வடிவங்களில் பதிவு செய்கிறேன். இப்போது அவரது
பேனாமுனை சாதீய ஒடுக்குமுறைக்கு எதிராக்க் கோடுகள் கீறிக் கொடுமைகளைக் கோட்டைத் தாண்டவிடாமல்
செய்ய முனையும் நோக்கத்தில் தப்பாட்டம்' என்ற இந்நூலைத் தந்துள்ளார். தப்பான ஆட்டங்கள் தடுத்து
நிறுத்தப்பட்டால் நாடு மனிதநேயம் நோக்கி நடைபோடும் என்ற உணர்வைத் தூண்டிவிடுகிறார். சாதி வெறியையும்
மதவெறியையும் தூண்டிவிட்டுத் தீண்டாமைக் கொடுமையைப் பற்றிப்பிடித்துக்கொண்டு மனித நேயத்தைக் கொளுத்தத்
தீப்பந்தம் ஏந்தி நிற்பவர்களிடம் இருக்கும் நெருப்பில் அமைதி ஜோதியை ஏற்றத் துடிக்கிறார் நூலாசிரியர்.
_ - பதிப்பகத்தார்.