"ஜோஹானா ஸ்பைரி (1827 - 1901). இவர் குழந்தைகளுக்கான நாவல்களை எழுதிய ஓர் எழுத்தாளர். ‘ஹெய்டி’ நாவலுக்காக சிறப்பாக நினைகூரப்படுக்கிறார். அது, சுவிஸ் மலைகளில் வாழ்ந்த சிறுமியைப் பற்றிய மகிழ்ச்சியான கதை.
‘ஹெய்டி’ நாவல் முதன்முதலில் 1880இல் வெளியானது. உலகம் முழுவதிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அந்தப் புத்தகத்தின் வெற்றியும் பிரசித்தமும் அந்த நூற்றாண்டு முழுவதும் தொடர்ந்தது. இப்பொழுதும் இந்த நாவல் குழந்தைகளாலும் பெரியவர்களாலும் பெரிதும் விரும்பப்படுகிறது."