நல்ல குறுந்தொகை என்று அறிஞர் பெருமக்களால் போற்றப்படும் குறுந்தொகை நானூறில், முதல் நூறு பாடல்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு இக்கால மரபிற்கேற்ப கவிநடையில் எழுதப்பட்ட நூல் இது. இதற்கு முன்பே இவ்வகை நூல்கள் வெளி வந்துள்ளன என்றாலும் இது அவற்றிலிருந்து தனித்து நிற்கிறது; தனித்தடம் பதிக்கிறது