வயதான ஒருவர் 25வயது நிரம்பிய தன் மகனோடு ரயிலில் அமர்ந்திருந்தார். ரயில் புறப்படத் தயாரானது. அனைவரும் அவரவர் இடத்தில் அமர்ந்து கொண்டனர். ரயில் போகத் தொடங்கியதும் அந்த 25 வயது இளைஞன் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லைஇ மிகவும் ஆர்வத்தோடு அனைத்தையும் பார்த்துக் கொண்டே வந்தான். அவன் சன்னோலரத்தில் அமர்ந்திருந்தான். அவனுடைய கையை வெளியே நீட்டி காற்றைப் பிடித்து விளையாடினான்இ கத்தினான்இ அய்யோ மரங்கள் எல்லாம் குடுகுடு என்று ஓடுது என்று அவன் சொல்லி மீண்டும் கத்தினான். அவன் அப்பாவிடம் அதை சொன்னான். அந்;த வயதான அப்பா மகன் செய்வதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்இ அவனுடைய உணர்வுகளை புரிந்து கொண்டார். அப்பாவும் மகனும் பேசிக்கொள்வதை அருகில் அமர்ந்தவர்கள் பார்த்தும் கேட்டும் கொண்டே எரிச்சலடைந்தனர். வயது 25 ஆகிறது சிறு பிள்ளை போன்று நடந்து கொள்கிறான் என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டனர். மீண்டும் அவன் அவன் தந்தையிடம் அப்பா அங்க பாருங்க குளம்இ விலங்குஇ மேகம் எல்லாம் ரயிலோடவே வருது என்று சொன்னான். மீண்டும் எரிச்சலோடு அனைவரும் பார்த்தனர். திடிரென மழை பெய்ய ஆரம்பித்தது. அந்த இளைஞன் கையை வெளியே நீட்டினான். ஆவன் தந்தையிடம் அப்பா மழை என்ன தொடுகிறது என்று சொல்லி ஆச்சிரியப்பட்டான். அருகில் இருந்தவர்கள் பொறுமைதாங்காமல் அந்த பெரிய மனிதாரிடம் "ஏன் உங்க மகனை நல்ல மருத்துவருகிட்ட அழைத்து போய் காட்டக்கூடாதா என்று சொன்னார்கள்.