நமது சுவாசம், உணவு ஜீரண சக்தி, இதயத் துடிப்பு ஆகியவை எப்படி தன்னிச்சையாக இயங்குமோ, அதுபோல் ஆழ்மனமும் தன்னிச்சையாக இயங்குகிறது. நம்முடைய குணநலன்கள், சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்ளுதல், சிந்திக்கும் முறை ஆகியவை இயங்குவதற்கு வெளிமனதைப் போன்றே ஆழ்மனதும் உதவுகிறது. நம் உடலுடன் இணைந்தே ஆழ்மனமும் இயங்குகிறது. நமது பழக்கங்கள், நம்பிக்கைகள், சுய பிம்பம் ஆகியவை உருவாக ஆழ்மனம் துணை புரிகிறது.ஆழ்மனத்தின் பணிகள் என்ன?
உங்களைப் பற்றி உங்கள் ஆழ்மனத்தில் எத்தகைய பிம்பம் இருக்கிறதோ, இதுதான் புற உலகில் உங்களின் பிம்பமாக வெளிப்படும். உங்களைப் பற்றி நீங்கள் உயர்வான பிம்பம் வைத்திருந்தால், அது புற உலகிலும் எதிரொலிக்கும். ஆழ்மனத்தைப் பொறுத்தே உங்களின் பலமும், பலவீனமும் தீர்மானிக்கப்படும். உங்கள் குணநலனும் அமையும்.அன்றாட வாழ்வில் ஆழ்மனதின் பாதிப்பு