தற்போதைய காலக்கட்டத்தில் இரண்டு விஷயங்கள் தேவைப்படுகின்றன.ஒன்று, ஏழைகள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்று பணப்பாரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.இரண்டாவது, பணக்காரர்கள் எவ்வாறு உழைக்கிறார்கள் என்று ஏழைகள் தெரிந்து கொள்ள வேண்டும் .ஒரு முறை அல்ல, பல முறை. ஓயாமல் தொடரும் போர் இது. இன்று பிரபலமாக ஜொலித்துக்கொண்டிருக்கும் அத்தனை தயாரிப்புகளும் போர்க்களத்தில் பல சவால்களைக் கடந்து வெற்றி பெற்றிருக்கின்றன.
கோக், பெப்ஸி, ரிலையன்ஸ், பாம்பே டையிங், யூனிலிவர், நிர்மா, இன்டெல், காட்பரீஸ் போன்ற பிரபல நிறுவனங்கள் கடைபிடித்த திறமையான மார்க்கெட்டிங் போர் தந்திரங்களை இந்நூல் நமக்கு அறிமுகம் செய்துவைக்கிறது.
ஒரு நிர்வாகவியல் கல்லூரியில் இணைந்து பயிலவேண்டிய நுணுக்கமான பல பாடங்களை, சுவாரஸ்யமாகவும் எளிமையாகவும் பகிர்ந்துகொள்கிறார் எஸ்.எல்.வி. மூர்த்தி. மார்க்கெட்டிங் துறையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பயன்படப்போகும் நூல் இது.