நம் செந்தமிழ் நாடு, சேர சோழ பாண்டிய நாடுகளைப் போலவே தொண்டை நாடு கொங்கு நாடு என்ற இரண்டு தனிப் பிரிவுகளை பழங்காலத்தில் தன்னகத்தே கொண்டிருந்தது.
கொங்கு நாடு தனக்கென்று எப்பொழுதும் தனியான எல்லைகள், வரலாறு, கலை, பண்பாடு, நாகரிகம், பழக்க வழக்கம், ஆகியவைகளைக் கொண்டது. இதனைப் பழங்கால இலக்கியங்களும், கல்வெட்டுக்களும் உறுதிப்படுத்துகின்றன. நீலகிரி, கோவை, பெரியார், கரூர், சேலம், தருமபிரி மாவட்டங்களில் சில பகுதிகளும், திண்டுக்கல் மாவட்டப் பகுதிகளும் கொங்கு நாடாகும்.