மனித சமுதாயத்தின் வெளிப்பாடுகளான கலை இயக்கங்கள் யாவும் அச்சமுதாயத்தில் நிலவுகின்ற சமூக உற்பத்தி முறைகளின் அடிப்படைகளிலிருந்தும், உற்பத்தி உறவுகளின் ஊடாகவும் தோன்றுகின்றன.அவற்றில் குடும்பம், சமுதாயம், வாழ்க்கை நிலைமையின் அனைத்து சிக்கல்களும் உறவுமுறைகளும் விளக்கத்திற்கும் கேள்விகளுக்கும் உட்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் மேன் மேலும் வாழ்கையைப் பற்றிய புரிதல்களும் தேடல்களும் தொடர்கின்றன. தீர்வாக சமூக உற்பத்தி உறவுகளில் ஏற்படவேண்டிய மாற்றத்தை நோக்கித்தள்ளப்படுகின்றன. சமீபத்திய இலக்கியப் போக்கில் உருவாகிவெளிவந்த சிறுகதைத் தொகுப்புகளில் நன்கு பேசப்பட்ட சிறுகதைகளைத் தேர்ந்து தொகுத்துள்ளார் எம். பாண்டியராஜன் அவர்கள்.