மனத்தை அநீதிகள் மொய்க்காமல் இருக்கவேண்டுமென்றால் மனம் சுத்தமாகப் பராமிரக்கப்படவேண்டும். மனத்தைச் சுத்தமாகப் பராமரிப்பதற்கு நீதிக் கருத்துகள் பதிவு செய்யப்படவேண்டும. நீதிக் கருத்துக்களை வெறும்சொற்களால் அழுத்தமாகப் பதிவு செய்யமுடியாது. கதைகள் மூலமாக நீதிக் கதைகள் மூலமாக நீதிக் கருத்துக்களை வெறும்சொற்களால் அழுத்தமாகப் பதிவு செய்யமுடியாது. கதைகள் மூலமாக நீதிக் கருத்துக்களை எளிதாக உள்ளத்தில் புகுத்தி நிலைநிறுத்த முடியும். 'தந்தை தாய பேண்' என்று சொல்லிக்கொடுக்கும்போது அதற்குப் பொருத்தமான ஒரு கதையையும் சொல்லிக் கொடுத்தால் எளிதில் மனத்தில் பதிந்து எதிர்காலத்தில் அதை ஆணித்தரமாக்க் கடைப்பிடிக்கும் மனநிலை விரிவடையும். அதுபோன்று 30 நூல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.