தமிழகத்தில் மனிதச் சமூகம் சங்ககாலம் தொட்டு தொடர்ச்சியான வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டுள்ளது. இது இந்நிலத்தின் தன்த்தகுறூ எனலாம். இந்திய மொழிகளிலும், ஐரோப்பிய மொழிகளிலும் இந்நிலம் பற்றியும் மக்கள் பற்றியும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. வட இந்தியா நிலப்பாதைகள் வழியே பிற நாட்டினரோடு தொடர்பு கொண்டிருக்க, தென்னகம், கொறிப்பாகத் தமிழகம், நீர்ப்பாதை வழியே பிற நாட்டினரோடு தொடர்பு கொண்டிருந்தது.
இங்குக் கட்டுரைகள் வழியே தமிழ்ச் சமூகத்தின் வெவேறு காலத்தின் சான்றுகளில் இருந்து வேறு வேறு சமூகப் பொருளியல் கூறுகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. கட்டுரைகள் ஐந்து பகுதிகளில் தரப்பட்டுள்ளன.