யார் அந்தத் தமிழ்ச்சித்தர்கள். இஃது ஓர் அருமையான நூல். இந்நூலாசிரியர் அம்முக சொக்கநாத அடிகளார் ஆவர். திருமந்திரத்திலும் சித்தர்கள் பாடல்களிலும் நன்கு தேர்ச்சிப் பெற்றவர். திருமந்திரத்திலும் சித்தர்கள் பாடல்களிலுமுள்ள புரிந்துகொள்வதற்கு அரியவையான மறைபொருள்களை திறம்படவாராய்ந்து கருத்துக்களையும் உள்ளுறை பொருட்குறிப்புக்களையும் நுட்பமாக வெளியிடும் அறிவு பெற்றவர்.
இந்நூல் "தொன்மை வாய்ந்ததே தமிழ்" முதல் 'பால்வீதி காந்த மழை' 'ஈறாகப் பல துணை தலைப்புக்களில் தம்மாய்வுத்திறனை வெளிப்படுகிறது. இது சித்த மெஞ்சானத்தையும் அறிவியல் கண்ட பேருண்மைகளையும் ஒப்பு நோக்கி எழுதப்பட்ட ஒரு சிறந்த நூல்.