பதிப்புரை: இலக்கியங்கள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதற்காகவே நீதி உணர்வுகளை அழுத்தமாகக் காட்டுகின்றன. தேர்வில் நூற்றுக்கு நாற்பது மதிப்பெண்கள் பெற்ற மாணவன் தேறிவிடுகிறான். அதைப்போல் இலக்கியங்கள் கூறும் நெறிகளில் நூற்றுக்க நாற்பது நெறிகளையாவது மனிதன் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.
இலக்கியத் தகவு என்ற இந்நூலில் நூலாசிரியர் முனைவர். மா. இராமலிங்கம் அவர்கள் காவியங்கள் பற்றி பொதுவாகவும் வியந்தும் பேசுகிறார். இலக்கியங்களை ஊடுருவிப் பார்த்துத் தனது நுண்மாண் நுழைபுலத்தை மிளிரச் செய்கிறார்.