சிறந்த தமிழ் அறிஞரும், மானிடவியல் ஆய்வில் ஈடுபாடு கொண்டவருமான திரு. பி.எல். சாமி அவர்கள் எழுதிய தமிழ் இலக்கியத்தில் தாய்த்தெய்வ வழிபாடு '' தமிழ் மக்களின் நாகரிகத்தையும்,அவர்கள் பின்பற்றி வந்த மரபுகளையும் புரிந்துகொள்ள உதவுகிறது. தற்கால மதங்களில் காணப்படும் தெய்வ வழிபாடுகளின் தோற்றம், வளர்ச்சி பற்றி அறிவதற்கும் இந்நூல் துணை செய்கிறது.
பண்டைக் காலத்தில் தமிழ் மக்கள் தாய்த்தெய்வத்தை வழிபடக் காரணமாக அமைந்தது சமுதாயம். செழிப்புடன் இருக்க வேண்டும் எனும் வளமைசார் நோக்கு என்பதனை இந்நூலாசிரியர் தக்க சான்றுகளுடன் நிறுவ முயன்றுள்ளார்