தொல்லியல் என்னும் அறிவுப் புலத்தை அறிமுக நிலையில் இந்நூல் எடுத்துரைக்கிறது. பல்வேறு அறிவியல் புலங்களின் மலர்ச்சியுடன் இணைந்து தொல்லியல் எவ்வாறு அறிவியல் புலமாக மலர்ச்சியடைந்தது. தொல்லியலின் அகழ்வாய்வுக் கொள்கைகள், முறைகள், வரலாறு ஆகியவற்றை இந்நூல் எடுத்துக் கூறுகிறது.
முனைவர் தி. மனோன்மணி ஆர். நாகசாமி அவர்களிடம் தொல்லியலைப் பயின்றவர். முனைவர் தி. செல்வநாயகி வரலாற்றுத் துறையைப் பாடமாகப் பயின்றிருந்தாலும் தொல்லியல் துறையின் மீது அளவற்ற ஈடுபாடுடையவர். இவர்கள் இருவரும் அருள்மிகு பழனியாண்டவர் பெண்கள் கல்லூரியின் வரலாற்றுத்துறையில் பணியாற்றி வருகின்றனர்.