அன்றாட வாழ்வை ஊடுருவும் சாதனங்கள் நமக்குள் ஏற்படுத்தும் சலனங்களைப் பதிவு செய்யும் அதே நேரத்தில் அவற்றைப் பற்றிய விமர்சனங்களையும் முன்வைக்கின்றன சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் கட்டுரைகள். அரசியல், பொருளாதாரம், இலக்கியம், திரைப்படம், இணையம், விளையாட்டு ஆகியவை குறித்துப் பொதுக்களத்தில் பழங்கும் செய்திகளைக் கடந்து அவற்றுள் மறைந்திருக்கும் எதிர்க் கருத்தியலை இவை வெளிப்படுத்துகின்றன.