நகரவாசி, கிராமவாசி என எல்லோரையும் வியக்கவைக்கும் அருங்காட்சியகம், சென்னையை உலுக்கி எடுத்த 2002 நவம்பர் மாத மழை, எல்லோரையும் தன்னுள் சுருட்டிக்கொள்ளும் சென்னையின் புத்தாண்டுக் கொண்டாட்டம் என்று பல காட்சிகள் வியப்பால் விரிந்த அய்யனாரின் விழிகளின் வழியே தோற்றம்கொள்கின்றன. வியப்பு ததும்பும் இந்த வரிகளினூடே அய்யனார் என்கிற இதழியலாளரின் தகவல் சார்ந்த தேடலின் விளைவுகளும் விரவிக்கிடக்கின்றன.