ஜோதிடம் என்பதை விதியை மாற்றும் அறிவியல் எனலாம். வாழ்க்கையில் ஒளியேற்றும் தீபம். ஒலிகளின் வழு காட்டும்
உன்னதப் படைப்பு, துன்பம் வரும்போது பாதுகாப்புக்கான கேடயம் எண்களின்- எழுத்துக்களின் வலிமையைக் காட்டும் சாஸ்திரம். நடை ,உடை.அறிவு குணம், போன்றவை கர்மத்துக்கீடாகும். புத்தியோ நன்மை தீமை இரண்டுக்கும் நடுவில் நின்று வேடிக்கை பார்க்கும் . பகுத்தறிவைக் கொண்ட புத்தி மட்டுமே இறைவனுக்குச் சொந்தம். மனமும் உடலும் தாய்தந்தையின் விதிப்பயனால், வினையால் வந்ததாகும். மனத்தை உடல் வழியில் செல்லவிடாமல் புத்தியின் வழியில் திருப்ப வேண்டும் . கடினம் தான் முடிந்தவர்கள் முன்னேற்ற மடைகின்றனர். பேரும் புகழும் பெற்று வாழ்கின்றனர். விதியை நம்பிக் கொண்டு முயற்ச்சிக்காமலிருந்தால் , வாழ்வு அமையாது. விதியை விதித்த இறைவனே. அதிலிருந்து மீண்டு வர அறிவையும் கொடுத்துள்ளார். ஆறறிவு இறைவனால் நமக்கு அளிக்கப்பட்ட கொடை. அந்த அறிவின் மூலம்தான் நாம் பிரம்மாண்டமான ஆக்க அழிவு சக்திகளை விஞ்ஞானத்தின் மூலம் கட்டுப்படுத்துகிறோம். நட்சித்திரங்களும் கிரகங்களும் நம்வாழ்வை முழுக்கவே பாதிக்கின்றன. அதன் ஆகர்ஷண சக்திக்குட்பட்டு நாம் ஆட்டிவைக்கப்படுகிறோம். அதை எண் கணிதம் மூலம் நிவர்த்திக்க முடியும் என்பதை மனிதனின் அறிவே ஆராய்ந்து கண்டது.
- புலிப்பாணிதாசன்.