பல கோடி ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்தப் பூமியில் எத்தனையோ விதமான உயிரினங்கள் தோன்றின; அவற்றில் பல அழிவுற்றன; பல உயிர் தரித்தன. இயற்கையோடு இயைந்தும் போராடியும் தம்மையும் தம் இனத்தையும் தக்கவைத்துக்கொண்ட பல உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் ஒரு படிதான் ஆறறிவு பொருந்திய நாம். இந்தப் புத்தகம், பரிணாமத்தில் நாம் கடந்து வந்த கட்டங்களை, நம் மூதாதையரை அறியத்தரும் ஒரு முயற்சி.