கவிதைக்கேயான தனித்துவம் வாய்ந்த மொழியின் பிரயோகத்தில், புதுமை செறிந்த நவீன வெளிப்பாட்டு முறையில் முன்னிரு தொகுப்புகளிலிருந்து வித்தியாசமானவை இக்கவிதைகள். பிரிவுகளும் இழப்புகளும் ஏறபடுத்தும் வலிகளால் பெரும் துக்கத்தில் கனன்றுகொண்டிருக்கும் மனம் - 'பிரிவை அருந்த'த் தாகத்தோடிருக்கும் மனம் - தனிமையின் படுகுழியிலிருந்து தன்னை மீட்டெடுக்க முனையும் தவிப்பின் கலை வெளிப்பாடுகள் இவை.