கல்வி பற்றித் தமிழில் வந்துள்ள நூல்கள் பெரும்பாலும் கல்வியியல் நிறுவன மாணவர்களுக்கான ஆங்கில நூல்களின் தழுவில்களே. கல்வி ஒரு விவாதப் பொருள். விவாதங்களைத் தூண்டும் நூல்கள் கல்வி முன்னேற்றத்திற்கு உதவும். பேராசிரியர் வே. வசந்தி தேவி அவர்கள் பல்வேறு மேடைகளில் கல்வி பற்றி ஆழமான சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். அதுபோலவே சிறப்பு மிக்க இதழிகளில் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவற்றின் நோக்கமே கல்வி குறித்துப் பரவலான் விவாதங்கள் நடைபெற்று அவற்றின் விளைவாகத் தமிழகக் கல்வியில் சீரிய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமென்பதே.