குறுந்தொகை நூலின் செய்யுள்தொகை கடவுள் வாழ்த்து நீங்கலாக மொத்தம் 401 ஆகும். இதனுள் சொன்ன வரையறைகுக் மாறாக 307,391 ஆகிய இருபாடல்கள் ஒன்பது அடிகளைக் கொண்டவைகளாக உள்ளன. 'இத்தொகை முடித்தான் பூரிக்கோ. இத்தொகை பாடிய கவிஞர்கள் இருநூற்றைவர். இத்தொகை நாலடிச் சிற்றெல்லையாகவும் எட்டு அடி பேரெல்லையாகவும் தொகுக்கப்பட்டது. என்பது பழங்குறிப்பு. தொகுப்பித்தவர் யாரெனத் தெரியவில்லை. இவற்றில் பத்துப் பாடல்களின் ஆசிரியர்கள் பெயர் தெரியவில்லை. எஞ்சிய பாடல்களைப் பாடியவர்கள் 205 பேர் என மேலே காட்டிய பழங்குறிப்பு எடுத்துக்காட்டுகின்றது.