வாழ்க்கையை சந்தோஷமாகவும்,சுகமாகவும் அமைத்துக் கொள்வது நம்மிடம்தான் இருக்கிறது. குழந்தைகளை அரவணைத்துக் கொண்டும் அவர்களுக்கு நல்லவற்றைக் கற்றுக் கொடுத்தும் அவர்களை உயர்வடையச் செய்ய வேண்டும். அதில்தான் மகிழ்ச்சி இருக்கிறது.கணவருடன் அன்பு பாராட்டி அனுசரித்து வாழ்வதே நலம் தரும்.புரிந்து கொண்டு விட்டால் தாம்பத்தியத்திலும் குடும்ப வாழ்விலும் பிரச்சனைகளே கிடையாது. அழகு என்பது வசீகரிக்கும் தன்மை கொண்டது. உடலும் உள்ளமும் அழமுடன் இருப்பதையே எல்லோரும் விரும்புகிறார்கள்.சமையலறையும்,வரவேற்பறையும், படுக்கையறையும் பாங்காக அமைந்தால் அன்றாட வாழ்வு ஆரோக்யமானதாக அமையும்.