திருமதி கங்கா ராமமூர்த்தி அவர்கள் எழுதியுள்ள நம் நாட்டின் தேசியச் சின்னங்கள் என்ற நூலைப் படித்துப் பார்த்தேன். இன்றைய இளைஞர்களுக்குச் சமுதாய உணர்வைத் தூண்ட ஒருமைப்பாட்டு நிலையை வளர்க்கத் துணையாகவுள்ள பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கியது இந்த நூல். தேசிய கீதம் பற்றிப் பேசி அடிப்படை தேசப்பற்று உணர்வைத் தூண்டும் வகையில், ஆசிரியர் எழுதியுள்ளது பாராட்டுக்குரியது. எல்லாக் கருத்துக்களுமே நாடக அமைப்பில் ஒருவர் ஒருவரோடு பேசிக்கொள்வது போல ஒருவரை ஒருவர் கேட்டுத் தெரிந்து கொள்வதுபோல எழுதியுள்ளார்.