மாணவர்களின் அடிப்படைக் கல்விக்கு கம்ப்யூட்டர் பயிற்சி முதன்மை வகிக்கிறது. அது தொழிற்சார்ந்த சில நுணுக்கமான விஷயங்களை முன்கூட்டியே சொல்லிவிடுவதால் பின்பு தொழில் தொடங்குவதற்கோ, நிறுவனங்களில் பணிபார்ப்பதற்கோ ஏதுவாகின்றது. இந்நூலின் ஆசிரியர் சொல்லும் கருத்துகள் விஞ்ஞான உலகத்திற்கு அழைத்துச் செல்லவும், அதனுள்ளிலிருந்து கொண்டு விண்வெளியையும் மற்ற கிரகங்களையும் ஆராய்ச்சி செய்து வரைபடங்களின் விளக்கங்களோடு புரிய வைப்பது மிக அருமை.
சில புரியாத விஷயங்களை உதாரணத்தோடு விளக்குவது போல், இவர் கதைகளோடு அறிவியலை மாணவர்களின் நெஞ்சில் புகுத்துவது பிரமாதம். அழுகின்ற குழந்தைக்கு கசப்பான மருந்து இனிப்போடு வழங்குவது போலத்தான் நூலாசிரியர் விளையாட்டுப் பிள்ளைகளின் மனதை அறிவியல் கதைகள் சொல்லி நுகர வைக்கிறார்.