இந்த கதை 1994 ஆம் ஆண்டு க்ரைம் நாவல் என்ற இதழில் வெளிவந்தது.
மியூசிக் அகாடமி ஹால்.
ஜனத்திரள் நிரம்பி வழிய மேடையில் மைக்கின் முன்னால் நின்றிருந்த அமைச்சர் தோளில் போட்டிருந்த துண்டை சரிப்படுத்தியபடி பேசிக் கொண்டிருந்தார்.'' உண்னையிலேயே நான் மனம் திறந்து பாராட்டுகிறேன். அரசு நிர்வாகத்தில் ஒரு அமைச்சராக இருக்கிற எனக்கு எவ்வளவோ பிரச்னைகள். இந்த பிரச்னைகளையெல்லாம் ஒரு இரண்டு மணி நேரத்திற்கு என்னால் மறக்க முடிந்ததென்றால் அதற்கு காரணம் திருமதி கலா பாஸ்கரன் அவர்களின் அற்புதமான நாட்டியம்தான். அவர் மேடையிலே ஆடும் போது எனக்கு அவர் ஒரு பெண்ணாக தோன்றவில்லை. ஒரு மின்னல் கீற்று மாதிரி தோற்றம் காட்டினார். அவருடைய கால்களும் கைகளும் பரத மொழியை தப்பில்லாமல் பேசின. தமிழ்நாட்டுக்கு இப்படிப்பட்ட ஒரு அரிய பொக்கிஷம் கிடைத்ததற்காக - கலைதுறையில் இருக்கிர எல்லாருமே பெருமைபட்டுக் கொள்ளலாம். பரதக்கலைக்கு திருமதி கலா பாஸ்கரன் அவர்கள் செய்த சேவையை பாராட்டி மியூஸிக் அகாடமியின் சார்பாக அவர்க்கு ' கலைநிறைச் செல்வி' என்ற பட்டத்தை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.''