பார்ப்பனர்களின் அனைத்து வகையான பொய்களையும் புனைச் சுருட்டுகளையும் ஆதாரப்பூர்வமாக தோலுரிக்கிற நூல் தான் அறிஞர் அண்ணாவின் இந்த ஆரிய மாயை. பேராசை பெருந்தகையே போற்றியில் ஆரம்பித்து பார்ப்பனிய சூதுவாதுகள் அனைத்தையும் அறிந்துகொள்ள 75 ஆண்டுகளுக்கு முன்பே அண்ணாவால் எழுதப்பட்டது இந்த நூல். சாதியின் பெயரால்,கல்வியின் பெயரால், ஆன்மீகத்தின் பெயரால், மதத்தின் பெயரால், அரசியலின் பெயரால், மக்களை பிளவுபடுத்தி எல்லாவகையிலும் முழுதாக அபகரித்து அனுபவிப்பதை எங்கள் பிறவிக்கு கடவுள் விதித்த விதி எனக் கூறி ஏமாற்றி வாழ்ந்து வரும் வஞ்சக நரிக் கூட்டத்தின் சூழ்ச்சியை விவரிக்கிறது இந்தப் புத்தகம்.