எல்லையற்ற வானத்தை, நட்சத்திரங்களை, நெபுலாக்களைக் கற்பனை செய்யுங்கள்.. எங்காவது மிகப் பெரிய நெபுலாவின் ஆழத்தினின்றும் சூரியன் பிரகாசிக்கத் தொடங்குகிறது. சூரியனிடமிருந்து கோளங்களின் மேற்பரப்பில் பொருள் உயிர் பெறுகிறது. தன்னைத் தானே அறியத் தொடங்குகிறது. ஒரு மனிதன் தோன்றுகிறான்...'' இந்நூலின் ஆசிரியர்கள் 1969 - ல் தங்கள் பணியைத் தொடங்கினார்கள். மனிதன் எங்ஙனம் தோன்றினான், எங்ஙனம் வேலை செய்யவும் சிந்திக்கவும் தொடங்கினான். எங்ஙனம் நெருப்பையும் இரும்பையும் கைப்பற்றினான். எங்ஙனம் அவன் இயற்கையை மீறிய ஆற்றலைப் பெற்றான். உலகை எங்ஙனம் கூர்ந்து நோக்கினான். மறுவடிவமைத்தான் என்பவற்றை அவர்கள் கூறுகிறார்கள்.