திரைவானின் நட்சத்திரக் கவர்ச்சியில் மயங்கிய ரசிகர் கூட்டத்தை, அரசியல் வாக்கு சக்தியாக மாற்றிய அசுர மனிதர் எம்.ஜி. ஆர் வெற்றிச் சிதறல்களின் கோர்ப்புதான் இச்சிறுநூல்! ஆம்... நான் ஆணையிட்டால்... அது நடந்து விட்டால்...! என்று சினிமாவில் தனது கனவும் பட்டறையில் தீட்டிய வீரவாளை வெள்ளித்திரைக்கு வெளியே சுழற்றி வீசி ஆட்சிச் சிம்மாசனத்தில் அமர்ந்து, எண்ணியதையெல்லாம் நிறை வேற்றி மக்கள் திலகமாக இந்தத் தமிழ் மண்ணில் மாய வித்தை புரிந்தவர்தான் எம்.ஜி.ஆர்.!