நித்தமும்பார்க்கும் மனிதர்களிடம் கேட்டுவிடக் கூடிய, பேசிவிடக் கூடிய விஷயங்களைக் காலம் கடந்தும் பேசாமல் கடக்கும் மனிதனின் வேதனைகளைப் பதிவு செய்யவே இந்தக் கதலி உதித்து இருக்கிறதுசிலமரணங்கள் ரசித்து, ருசித்து, வாழ்ந்து நிகழ்ந்திருக்கும். சில மரணங்கள் வாழாமலேவாழ்ந்து மரணப்படுக்கையில் வீழ்ந்திருக்கும். “ஒவ்வொரு முறையும் ஒருவர் உலகைவிட்டு உதிரும்போது எத்தனை ஏக்கத்தோடு சென்றார்களோ? எத்தனை ஆசைகள் நிறைவேறாமல் சென்றார்களோ?” என்ற எண்ணம் அடிக்கடிஉதிக்கும் போதுதான், அந்தப் புலம்பல்களைப் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆசை பிறந்தது.ஒரு வேளை மரணத்திற்குப்பிறகோ, இல்லை மரணம் அடைவதற்கு முன்பு இருக்கும் மனநிலையைப் பதிவு செய்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையையும் பதிவுசெய்து இருக்கிறேன்.