''தாத்தா, வேண்டாம்!'' இதில் வரும் நிகழ்ச்சிகள் இன்று பெரும்பாலான குடும்பங்களில் மனத்தைப் பக்குவப்படுத்தி, நல்ல குடிமக்களாக வளர்த்த தாத்தா பாட்டிகளின் காலம் போயே போய்விட்டது. தேவைகளைக் குறைத்துக்கொண்டு, சிக்கனமாக இருந்து, எளிமையாகக் குடும்பத்தை நடத்த வேண்டும் என்ற மனப்போக்கு மாறிவிட்டது. விலைமிக்க நவீன காலப் பொருள்களை வாங்கி வசிதயாக வாழவேண்டும்; அதற்காகக் குடும்பத்தில் எல்லோரும் சம்பாதித்துக் குடும்ப வருமானத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்ற விழைவின் உச்சகட்டத்தில் இருக்கிறோம்.